ஒரே ஆடை அணிந்து வந்து சர்ச்சையில் சிக்கிய காதலர்கள்.. கண்டுபிடித்த ரசிகர்கள்!
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ஒரே மாதிரியான ஆடை அணிந்திருந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காதல் ஜோடி
தெலுங்கு பிரபலங்களான நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இடையில் காதல் எனதொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
இவர்கள் பற்றி ஏகப்பட்ட சிகிச்சைகள் எழுந்தாலும் நடிகர்கள் சார்பில் எந்த விதமான பதிலும் வெளியாகவில்லை.
பண்டிகைகள் துவக்கம் சுற்றுலா வரை ஒரே மாதிரியான புகைப்படங்களால் சர்ச்சையில் அதிகமாக சிக்கிக் கொள்கிறார்கள்.
இருந்தபோதிலும் அவர்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் இந்தக் காதலை வெளிப்படுத்தி வருகின்றன.
சினிமாவிற்குள் ராஷ்மிகா வந்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் இணைந்து கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் நினைத்து பார்க்க முடியாத மார்க்கட்டை இருவருக்கும் உருவாக்கியது.
ஆடையால் எழுந்த சர்ச்சை
இந்த நிலையில் வெளியில் செல்லும் போது இருவரும் ஒரே மாதிரியான மேற்ச்சட்டை அணிந்து வந்துள்ளனர்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகமாக கவரப்பட்டு வருகின்றது. ஆனால் இந்த காதல் குறித்து இருவரும் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகின்றனர்.
இந்த ஆடையானது விஜய் தேவரகொண்டாவின் சொந்த ஆடை நிறுவனமான RWDY நிறுவனத்தில் தயாரிக்கப்படுகின்றது என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தான் ராஷ்மிகா அணிந்து ப்ரோமோஷன் செய்திருப்பார் என்ற கருத்தும் விமர்சகர்கள் மத்தியில் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |