மணமக்களை வாழ்த்த நேரில் சென்ற விஜய்.. ஒற்றை புகைப்படத்தால் முடிவுக்கு வரும் சர்ச்சை
தம்பதிகளை வாழ்த்துவதற்காக நடிகர் விஜய் நேரில் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார். தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
முடிவுக்கு வரும் சர்ச்சை
இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் இன்றைய தினம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. இதில் பல சினிமா பிரபலங்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கீர்த்தி சுரேஷ் மற்றும் தளபதி விஜய் இருவரும் உறவில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
கீர்த்தி சுரேஷ் எங்கு சென்று விஜய் குறித்து பேசினாலும் ஊடகங்களின் கவனம் குறித்த சர்ச்சையின் மீது தான் இருக்கும். இதற்கு இரு தரப்பில் இருந்தும் எந்தவிதமான பதிலும் வரவில்லை.
இப்படியொரு சமயத்தில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு தளபதி விஜய் நேரில் வாழ்த்திய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த இணையவாசிகள், “ ஒற்றை புகைப்படத்தால் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியா?” எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |