கோமாவுக்கு சென்ற பிரபல தமிழ் நடிகரின் தற்போதைய நிலை என்ன?
தற்போது நலமாக உள்ளதாகவும், பலரின் பாவத்தை சம்பாதித்ததால் இப்படி நடந்துவிட்டதோ என எண்ணுவதாகவும் வருத்தமுடன் தெரிவித்துள்ளார் நடிகர் வேணு அரவிந்த்.
தமிழ் சீரியல்களில் வில்லன்
காதல் பகடை, காதல் வாங்கி வந்தேன், செல்வி, வாணி ராணி போன்ற தொடர்களின் மூலம் பிரபலமானவர் வேணு அரவிந்த்.
இது தவிர அலைபாயுதே, வல்லவன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார், சபாஷ் சரியான போட்டி என்ற படத்தை இயக்கியுள்ளார்.
கொரோனா தாக்கியதில் கோமா நிலைக்கு சென்றதாக தகவல்கள் பரவின, இது பொய்யானது என சக நடிகர்கள் விளக்கம் அளித்திருந்தனர்.
என்ன நடந்தது?
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள வேணு அரவிந்த், நான் தற்போது உயிருடன் இருக்கிறேன், கடந்தாண்டு நடந்தது அத்துடன் முடியட்டும். இனிமேல் என்ன நடக்கப்போகிறது என்பதை மட்டும் பார்க்கலாம்.
நிறைய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததால் பலரது சாபத்தை வாங்கிவிட்டேன், அப்போது எனக்கு வெகுமதியாக தெரிந்தது.
ஒருதடவை காரில் நான் அமர்ந்திருந்த போது, ஒரு அம்மா மண்ணை தூவி சாபமிட்டார்.
நிறைய சாபங்களால் இப்படி நடந்துவிட்டதோ என எண்ணத் தோன்றுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தலையில் சின்ன கட்டியொன்று இருந்ததாகவும், தற்போது அதை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.