மகன் இன்பநிதியை வழி அனுப்பிய உதயநிதி குடும்பம்... விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!
தமிழ் சினிமாவில் நடிகராகவும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். மகன் இன்பநிதியுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.
இதனையடுத்து, வியப்பூட்டும் செய்தியாக இந்திய ஐ லீக் கால்பந்து தொடரில் தடம்பதிக்கவிருக்கிறார் இன்பன் உதயநிதி. சென்னையிலுள்ள மேக்ஸ் கால்பந்து அகாடமியில் இன்பன் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் திடீரென சென்னை விமான நிலையத்தில் சென்றுள்ளனர்.
மகன் இன்பநிதியை வழி அனுப்ப உதயநிதி குடும்பமே சென்றுள்ளது. இதனால், அங்கு திடீரென பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும், இந்தியாவில் நடக்கும் இந்தியன் லீக் கால்பந்து தொடரினல் 21 அணிகள் விளையாடுகிறது.
அதில், மணிப்பூர் மாநிலத்திற்கான நெரோகா கால்பந்து அணிக்கு விளையாடுவதற்காக தமிழ்நாடு மாநில முதல்வரின் பேரனும், உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி தேர்வாகி இருக்கிறார்.
இதனாலேயே சென்னையிலிருந்து வெளிநாடு செல்வதற்காக இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்த இன்பநிதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் வழியனுப்ப குவிந்துள்ளனர்.