நிஜமான வீச்சருவாள்.. விஜயகாந்த் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்த நடிகர்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரின் பிரிவால் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்துடன் பல படங்கள் நடித்தவரும், அவரின் நீண்ட கால நண்பருமான தலைவாசல் விஜய், விஜயகாந்தின் இறப்பு குறித்து வருத்தத்துடன் உருக்கமாக பேசியுள்ள விடயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்த்
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவிற்கு திரையுலகத்தினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அவ்வகையில் விஜயகாந்துடன் பல படங்கள் நடித்தவரும், அவரின் நீண்ட கால நண்பருமான தலைவாசல் விஜய், விஜயகாந்தின் இறப்பு குறித்து வருத்தத்துடன் பேசியிருக்கிறார்.
தலைவாசல் விஜய் தலைவாசல் குறிப்பிடுகையில், விஜய் கேப்டன் அவர்களை மறக்கவே முடியாது. கிட்டத்தட்ட 20 வருட நட்பு. எப்போது பேசினாலும் முதல் நாள் பேசியதை அடுத்த நாள் பேசுவது மாதிரிதான் இருக்கும்.
8 படங்களுக்கும் மேல் அவரோடு நடித்திருக்கிறேன். அது எல்லாமே நீங்காத நினைவுதான். அப்போது கேரவன் எதுவும் கிடையாது. அவரோடு சேர்ந்து உட்கார்ந்து மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருப்போம். ஒரு சமூக நலத்திற்கான வீடியோவிற்காக நானும், நெப்போலியனும், அவரும் சேர்ந்து நடித்தோம்.
முன்னதாக தலைவாசல் படத்தின் படப்பிடிப்பில் ஒரு காட்சியில் விஜயகாந்த் என் கையை வெட்டுவது போல் காட்சி இருந்தது.
இந்த படப்பிடிப்பிற்கு டம்மியாக செய்யப்பட்ட வீச்சருவால் கொண்டு வர மறந்துவிட்டார்கள் படக்குழுவினர். அப்போது என்ன செய்வது என தெரியாமல் எல்லாரும் முழித்து கொண்டு இருந்தார்கள்.
ஆனால் அந்த ஷாட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற சூழல் இருந்தது. என்ன நடந்தது என விஜயகாந்த் கேட்டு இருந்தார். உடனே நடந்ததை எல்லாம் சொல்லி கூறினோம் உண்மையான வீச்சருவாளை வைத்து எடுக்க யோசித்தார் விஜயகாந்த்.
பின்னர் என்னிடம் "என் மேல் நம்பிக்கை இருக்கிறதா? நான் இந்த அறிவாளை வைத்து வெட்டவா ?" என கேட்டார்.
இரண்டு நிமிடம் யோசித்துவிட்டு சில வேலை கையை சரியாக வெட்டிவிட்டாலும் பிரச்சினை இல்லை. நம் கைக்கு ஏதாவது நடந்தாலும் விஜயகாந்த் கண்டிப்பாக கைவிடமாட்டார் என்ற நம்பிக்கையில் நடிக்க சம்மதம் சொல்லி சொன்னேன். பின் ஒரே ஷாட்டில் தத்ரூபமாக அந்த காட்சியை விஜயகாந்த் நடித்தார். இதனை மறக்கவே முடியாது.
அப்போது நடித்த போது பழகிய குணத்தோடு தான் கடைசி வரை இருந்தார். அவரோடு நான் நடித்த கடைசி படம் 'சகாப்தம்'. அவர் மகன் நடித்திருந்தார். கேப்டனோடு நானும் நடித்தேன். நட்பில் மாற்றமே இல்லாத மனிதர். தான் சாப்பிடுகிற உணவு எல்லோருக்கும் கிடைக்கிறதா என்று கண்காணித்துக் கொண்டே இருப்பார்.
சிவாஜி சார் இறந்த போது அவர்தான் அந்த இறுதி ஊர்வலத்தை சுமுகமாக நடத்த உதவினார். அவர் இல்லையென்றால் அதை இத்தனை பேரைக் கூட்டி அவ்வளவு அமைதியாகவும் பொறுப்பாகவும் நடத்தியிருக்க முடியாது. விஜயகாந்த் கார்கில் நிவாரண நிதிக்கு அவ்வளவு தூரம் இறங்கி வேலை செய்தார்.
அவர் உடல்நலம் குன்றி இருந்தார். சரி என்றைக்கு வேண்டுமானாலும் அவரை சந்திக்கலாம் என்று நிறைவாக இருந்தேன். இன்று அவர் இறந்து விட்டதும் மனம் தாங்க முடியவில்லை. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது என தலைவாசல் விஜய் உருக்கம் தெரிவித்துள்ளார்.
வாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |