ஆஸ்கார் விருதுக்காக நடிகர் எடுத்த முடிவு- மனைவி ஒப்புக் கொள்வாரா? கலாய்க்கும் ரசிகர்கள்
ஆஸ்கார் விருதுக்காக 4 ஆவது குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவில் இருப்பதாக நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு பேசியது இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
வீர தீர சூரன் திரைப்படம்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சியான் விக்ரம்.
இவர், நடிப்பில் அடுத்ததாக ”வீர தீர சூரன்” என்ற திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண்குமார் இயக்கியுள்ளார்.
அரண்குமார் இதற்கு முன்னர் சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
சியான் படத்தில் அவருக்கு ஜோடியாக துஷரா விஜயன், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஆஸ்காருக்காக நடிகர் எடுத்த முடிவு
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக படத்தின் ப்ரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
அப்போது அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மலையாள நடிகர் ஒருவர் பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, “எனக்கு தமிழும், தமிழ் சினிமாவும் ரொம்ப பிடிக்கும். இந்த விழாவில் தான் ஜி.வி. பிரகாஷ் சாரை நான் பார்த்தேன். நான் அவருடைய ரசிகன்.
எனக்கு முன்று குழந்தைகள் இருக்கிறது. முதல் குழந்தை பிறந்தபோது முதல் ஸ்டேட் விருது கிடைத்தது. இரண்டாவது குழந்தை பிறந்தபோது இரண்டாவது ஸ்டேட் விருது கிடைத்தது, மூன்றாவது குழந்தை பிறந்த போது ஒரே ஆண்டில் ஸ்டேட் மற்றும் நேஷ்னல் விருது கிடைத்தது. இனிமேல் ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்றால் என்னுடைய மனைவியை நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள சொல்வேன்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி கேட்டு ரசிகர்கள் உட்பட பிரபலங்களும் திகைத்து போனார்கள். அத்துடன் நடிகரை கலாய்த்து பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
