இழந்த மார்கட்டை ஒரே படத்தில் மீட்ட சிவகார்த்திகேயன்- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அமரன் படத்தின் மூலம் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதில் சாய் பல்லவியின் நடிப்பு மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டது.
உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த இந்த திரைப்படம் நாட்டிற்காக உயிரையே கொடுத்த இராணுவ வீரனின் கதையாகும்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது கைவசம் எஸ்கே 23 மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், இன்றைய தினம் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய 40ஆவது பிறந்த நாளை மனைவி, குழந்தைகளுடன் கொண்டாடுகிறார். இந்த சமயத்தில் நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், சிவகார்த்திகேயனிடம் மொத்தமாக ரூ. 120 கோடி முதல் ரூ. 150 கோடி வரையிலான சொத்துக்கள் உள்ளன. தற்போது ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் இவருக்கு சொந்தமான பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா உள்ளது. மாறாக இவை யாவும் அதிகாரப்பூர்வமான பதிவு எதுவும் இல்லை.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |