நடிகர் சிங்கம் புலியின் மனைவி யார் தெரியுமா? பலரும் அறியாத தகவல்
நகைச்சுவை நடிகர் சிங்கம் புலியின் மனைவி பற்றிய சுவாரஸ்யமான தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் சிங்கம் புலி
தமிழ் சினிமாவில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் நடிகர் தான் சிங்கம் புலி.
இவர் மகாராஜா படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு வெளிப்படுத்தியிருந்தார்.
நடிகர் சிங்கம் புலியை பெரும்பாலும் காமெடி நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் இயக்குநர்.
அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான ரெட் திரைப்படத்தையும், சூர்யா நடிப்பில் வெளியான மாயாவி திரைப்படத்தையும் இவர் தான் இயக்கியுள்ளார்.
இதன் பின்னர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படம், நான் கடவுள் ஆகிய படங்களில் இணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இப்படி ஏகப்பட்ட திரைப்படங்கள் இயக்கியுள்ளார்.
மனைவி யார் தெரியுமா?
இந்த நிலையில், பல் திறமை கொண்டவராக இருக்கும் சிங்கம் புலி சமீபத்தில் பேட்டியொன்றில் அவரது மனைவி குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “என்னுடைய மனைவி ஆர்மியில் கர்னலாக இருக்கிறார். நான் கல்யாணம் முடிக்கும்போது கேப்டனாக இருந்தார். அப்புறம் மேஜர் ஆனார். தற்போது கர்னலாக பணியாற்றி வருகிறார்.
என்னுடையது காதல் திருமணம் இல்லை. அவர் என்னுடைய சொந்த மாமா பொண்ணு தான். எங்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்...” என நிறைய விடயங்கள் பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |