பொய் சொன்னால் அறை தான் விழும்.. உபி முதல்வருக்கு சித்தார்த் கொடுத்த அதிரடி பதிவு!
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால், தடுப்பூசி செலுத்திகொள்வதன் மூலமே கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடமுடியும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு பேசுபொருளாகி இருக்கிறது. டெல்லி, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும், இதனால் சிகிச்சைப் பலனிற்றி நோயாளிகள் இறந்ததாகவும் வெளியாகும் செய்திகள் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆக்சிஜன் இல்லை என்று பொய் கூறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதற்கு நடிகர் சித்தார்த் ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார் . அதில், “மனிதராக இருந்தாலும், சாமியாராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும்” என தெரிவித்துள்ளார்.
Any false claims of being a decent human being or a holy man or a leader will face one tight slap. https://t.co/3ORv22zVCV
— Siddharth (@Actor_Siddharth) April 27, 2021