Photo Album:மீண்டும் ஒன்றுகூடிய சொந்தங்கள்.. குதூகலிக்கும் ஷாரிக்- மரியா- ரியாஸ்கான் வரவில்லையா?
நடிகர் ஷாரிக் ஹாசன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஷாரிக் ஹாசன்
தமிழ் சினிமாவில் பென்சில் உட்பட ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ஷாரிக் ஹாசன்.
இவர், பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை தன்வசப்படுத்தினார்.
இவற்றையெல்லாம் விட ஷாரிக்கின் திருமணம் மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டது. ஏனெனின் இவர் திருமணம் செய்து கொண்ட பெண் மரியா ஷாரிக்கை விட மூன்று வயது மூத்தவர், அத்துடன் இவருக்கு 9 வயது மதிக்கதக்க பெண் பிள்ளையொருவரும் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் அனைவரும் ஒரு குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
இவர்களை சுற்றி பல விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார்கள்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இந்த நிலையில், நடிகர் ஷாரிக்கின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்பதால் முதல் முறையாக குடும்பத்தினருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
இந்த நிகழ்வில் தம்பதிகளின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மகிழ்ந்துள்ளனர்.
மாறாக இந்த கொண்டாட்டத்தில் ஷாரிக்கின் அம்மாவும் நடிகையுமான உமா ரியாஸ் கலந்து கொண்டார். ஆனால் தந்தை ரியாஸ் கான் கலந்து கொள்ளவில்லை.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், இவர்களின் ஒருங்கினைப்பிற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |