நடிகர் சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா? பலரும் பார்திராத புகைப்படம்
நடிகர் சத்யராஜ் இளம் வயதில் அவரது மனைவி உடன் இருக்கும் சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமான பகிரப்பட்டு வருகின்றது.
நடிகர் சத்யராஜ்
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குணச்சித்திர நடிகராக கலக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவின் வில்லனாக அறிமுகமான சத்தியராஜ், தனது ஆரம்ப காலகட்டங்களில் படங்களில் வில்லனாக வந்தார். ஆனால் பாரதிராஜாவின் ‘கடலோர கவிதைகள் அவரின் வில்லன் விம்பத்தை மாற்றியமைத்தது.
ஹீரோ, வில்லன் என ஆரம்பகாலத்தில் கலக்கிய நடிகர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர ரோல்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்தன் காரணமாக இந்திய அளவில் கொண்டாடப்பட்டார்.
வால்டர் வெற்றிவேல், மிஸ்டர் பாரத், மக்கள் என் பக்கம், நண்பன், அமைதிப்படை, ரிக்ஷா மாமா, பாகுபலி, கனா, பெரியார் போன்ற படங்கள் இன்று சத்யராஜ் நடிப்பில் மக்களை வியக்க வைக்கும் படங்களாக காணப்படுகின்றது.
சத்தியராஜ் மனைவி
சத்யராஜ் 1979ல் மகேஸ்வரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.
சத்யராஜின் மகன் சிபிராஜும் தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகராக இருந்து வருகிறார். சத்தியராஜ் மற்றும் அவரின் மனைவியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |