மீண்டும் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விஜய் நண்பரின் மனைவி; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தமிழ் சின்னத்திரை சீரியல்களில் புகழ்பெற்றவர் நடிகர் சஞ்சீவ். இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
சஞ்சீவ் சீரியலில் நடித்த ப்ரீத்தி சீனிவாசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த ப்ரீத்தி சீனிவாசன் இதற்குமுன் சீரியலில் நடித்துகொண்டிருந்தார் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை நிறுத்திவட்டார்.
இந்த நிலையில், மீண்டும் இவர் சீரியலில் நடிக்க உள்ளார். பிரபல சன் டிவி சேனலில் ஒளிப்பரப்பாகும் அன்பே வா சீரியல் தான் அது. இந்த சீரியலில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் அஞ்சலி.
தனக்கு பெரிய அளவில் காட்சிகள் இல்லை என்பதால் இந்த சீரியலில் இருந்து அவர் விலகிக் கொண்டார். அஞ்சலி விலகியதை தொடர்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி சீனிவாசன்.
தற்போது, இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலில் தான் நடிக்க இருப்பதை உறுதி செய்துள்ளார்.
