இதை எதிர்பார்த்தால் கண்டிப்பா Breakup தான்! கருத்து சொன்ன ரஞ்சித்தை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
நடிகர் ரஞ்சித் காதல் பற்றிய தவறான கருத்துக்களை பகிர்ந்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் எழுந்து வருகின்றது.
தமிழ் சினிமா
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநர்களில் வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணி ரட்னம், சங்கர், விக்னேஷ் சிவன், நெல்சன், லோகேஷ் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.
இந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்.
வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோர் இயக்கிய படங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல்கள், சாதி பார்க்கக்கூடாது, அடுத்தவரை ஒடுக்கக்கூடாது ஆகிய கருத்துக்களை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்களின் படங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு இருக்கிறது.
காதலை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஞ்சித்
இப்படியொரு நிலையில் கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கி வரும் ரஞ்சித் பேட்டியொன்றில் பகிர்ந்த சில கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
அதாவது காதலிப்பவர்கள் சரியாக இருந்தால் பெற்றவர்கள் நிச்சயமாக சம்மதம் தெரிவிப்பார்கள். பெற்றோர்களை எதிர்த்து கொண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை.
அதே போல் காதலிப்பதற்கு என்று ஒரு வயது இருக்கிறது. குறிப்பிட்ட அந்த வயதை தாண்டி காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லையென்றால் பெற்றோர்கள் சொத்தில் பங்கு கேட்கக்கூடாது.” உள்ளிட்ட கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ரஞ்சித்தின் கருத்தை கேட்ட ரசிகர்கள், “ 'காதலில் ஏது சார் நாடக காதல்.. காதல்னாலே உண்மைதானே சார். நீங்களே காதல் திருமணம் தான் செய்தீர்கள். இப்போது ஏன் பிரிந்தீர்கள். அப்போது நீங்களும் நாடக காதல் தான் செய்தீர்களா?” என கடுமையான விளாசி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |