ரஜினிகாந்தின் பெயரை பயன்படுத்த தடை! சரியான பதிலடி கொடுத்த சூப்பர் ஸ்டார்! இனி சிக்கப்போகும் பிரபலங்கள்
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அவருடைய பெயரை வீணாக பாடல்களில் மற்றும் வசனங்களில் பயன்படுத்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட தகவல் சமூக வலைத்தளங்களில் வைரைலாகி வருகிறது.
ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம்
ரஜினிகாந்தை வைத்து அவருடைய மூத்தமகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தன்னுடைய தந்தையை வைத்து ஒரு இஸ்லாமியா படமொன்றை இயக்கப்போவதாக தகவல் வெளியாகி நிலையில் இது தொடர்பான தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன்படி, இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கவுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் “லால் சலாம்” எனும் பெயர் வைத்துள்ளார்.
தொடர்ந்து இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதோடு, மேலும் இந்த திரைப்படத்தில் ஏ. ஆர் .ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். எனவும் திரைப்படம் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதிரடியாக வெளியான அறிவிப்பு
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த்தின் வழக்கறிஞர் இளம்பாரதி, ரசிகள் மற்றும் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், அதில் நடிகர் ரஜினிகாந்த்தின் பெயர், புகைப்படம் மற்றும் குரலை அவரது ஒப்புதல் இல்லாமல் பயன்படுத்தி வருவதால் மக்களுக்கிடையில் ஒரு குழப்பநிலை ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் விதமாக அவரின் வழக்கறிஞர் இதனால் அறிவிப்பை விடுத்துள்ளார். இதனை மீறும் நபர்களுக்கு சட்டப்படி உரிமையியல், குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் ரஜினியின் பெயரை பயன்படுத்தி பிரபல்யமடைந்தவர்களுக்கு இது ஒரு சிறந்த அடியாக விழுந்துள்ளது.