மருத்துவமனையிலிருக்கும் ரஜினிகாந்தின் தற்போதைய நிலை... எப்போது வீடு திரும்புகிறார்?
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புவார் என்று மருத்துவமனை தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ம் தேதி உடல்நலக் கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதயத்திலிருந்து வெளியேறும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டடுள்ளதைக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அறுவை சிகிச்சை இல்லாத டிரான்ஸ்கேட்டர் முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐசியூவில் இருந்து வார்டுக்கு மாற்றப்பட்டுள்ள ரஜினிகாந்த் எப்பொழுது வீடு திரும்புவார் என்ற கேள்வி ரசிகர்கர்களிடையே ஏற்பட்டது.
தற்போது மருத்துவமனை தரப்பிலிருந்து நாளை வீடு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் வரும் 10ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |