'லவ் யூ தலைவா' என்று கூறிய ரசிகர்: ஒழுங்கா வேலைய பாரு என்ற ரஜினிகாந்த்! வைரல் காட்சி
நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விமானநிலையத்தில் தனது ரசிகருக்கு கூறிய அறிவுரை காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும், ரஜினிகாந்த் உலகம் முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளார்.
தனது எளிமையான பேச்சினாலும், நடிப்பினாலும் அனைவரையும் கட்டிப்போட்ட ரஜினிகாந்த் இன்றும் மக்களின் சூப்பர்ஸ்டாராக வலம் வருகின்றார்.
தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, விநாயகன் மற்றும் வசந்த் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
Thalaivar advice me today ❤🤘
— RajiniBalu 🤘 (@rajini_balu) January 31, 2023
பாலு எல்லா இடத்துக்கும் வராதீங்க போய் வேலைய பாருங்க வேலைதான் முக்கியம்🙏@rajinikanth Thalaivaaa u r great ❤🙏#Jailer
அனிரூத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுள்ள நிலையில், சென்னை விமான நிலையத்திற்கு ரஜினிகாந்த் வந்திறங்கியுள்ளார்.
இவரைப் பார்த்த ரசிகர் பாலு என்பவர் அருகில் சென்று லவ் யூ தலைவா என்று கூறியதற்கு, ரஜினிகாந்த் ஒரு நொடி நின்று ரஜினி ஒழுங்கா போய் வேலைய பாரு என்று அறிவுரை கூறி அந்த ரசிகரை அனுப்பி வைத்துள்ளார். இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
பாலு... எல்லா இடத்துக்கும் வராதீங்க...
— Rajini Warrior🌟🌟🌟🔪 (@RajiniWarrior) January 31, 2023
போய் வேலைய பாருங்க... அது தான் முக்கியம்...
-Thalaivar @rajini_balu #Jailer #Rajinikanth𓃵 pic.twitter.com/hNS0iFmB0v

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.