குட் நியூஸ் சொன்ன பிரேம்ஜி- மேளதாளத்துடன் கூடிய சொந்தங்கள்
திருமணமாகி ஒரு வருடம் கடந்த நிலையில், நடிகர் பிரேம்ஜி குட் நியூஸ் சொன்ன காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நடிகர் பிரேம்ஜி அமரன்
தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்டவர்களில் ஒருவராக இருப்பவர் தான் கங்கை அமரனின் மகன் பிரேம்ஜி அமரன்.
இவர் தன்னுடைய அப்பாவை போன்று சினிமாவில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும், சிறந்த நடிகராகவும் இருக்கிறார்.
பிரேம்ஜி நடிக்கும் படங்களில் அவர் நடிக்கும் கதாபாத்திரங்கள் சற்று வித்தியாசமாக இருக்கும். ஆனாலும் அடிக்க ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார்.
“ ப்ளே பாய்” என தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அழைக்கும் அளவுக்கு லீலைகளின் மன்னனாக இருந்தார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய 44 வயதில் இந்து என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடந்தது.
குட் நியூஸ் சொன்ன தம்பதி
இந்த நிலையில், திருமணத்திற்கு பின்னர் மாமியார் வீட்டுடன் இணைந்து தனியாக சில பிஷ்னஸ்களை செய்து வந்தார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, இன்ஸ்டாகிராமில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4.44 என பதிவிட்டிருந்தார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பிரேம்ஜி அப்பாவாக இருப்பாரோ என வாழ்த்துக்களும் குவிந்தன. இதற்கிடையில் நேற்றைய தினம் தடபுடலாக மனைவிக்கு வளைகாப்பு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடந்து முடிந்துள்ளன.
இதன்போது எடுக்கப்பட்ட காணொளியில், பட்டுவேட்டி சட்டையில் அப்பாவான சந்தோஷத்தில் பிரேம்ஜியின் முகம் ஜொலிக்கும் அளவுக்கு குஷியாக இருக்கிறார்.
இந்த காணொளி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளதுடன், பிரேம்ஜிக்கு தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
