திடீரென நடிகர் பிரபு உடல் எடையை குறைத்து ஏன்? வெளியான சுவாரஸ்ய தகவல்
நடிகர் பிரபு சமீபத்தில் உடல் எடை குறைந்து காணப்பட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இளைய மகன் பிரபு, ஒரு வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர்.
நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களை தெரிவு சேய்து நடித்து வருகின்றார்.
குறிப்பாக இவரது அழகு... புசு புசுவென்று இருப்பதும், அவர் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் குழியும் தான். ஆனால் திடீர் என சமீபத்தில் வெளியான இவரது புகைப்படம் ஒன்று பார்பவர்களையே ஆச்சரியப்படுத்தியது.
நடிகர் ரஹுமானுடன் எடுத்து கொண்ட செல்பி புகைப்படத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் இவர் மாறி, உடல் மெலிந்து காணப்பட்டார். இதனால் இவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.
தற்போது மீண்டும் உடல் எடை கூடி, பழைய பிரபுவாக மாறி விட்டார். ஏன் திடீர் என இவர் உடல் எடையை குறைத்தார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடித்து சமீபத்தில் முடிவடைந்த 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பில் இவர் நடித்திருந்தார்.
இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக தான் பிரபு மிகவும் கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை குறைத்துள்ளார். இந்த தகவல் வெளியாகி இவருக்கு நடிப்பின் மீதான டெடிகேஷனை வெளிப்படுத்தியுள்ளது என, ரசிகர்கள் பலர் வியர்ந்து பாராட்டி வருகிறார்கள்.
Transformation of Prabhu sir🔥🔥🔥 Ponniyin Selvan kagaa🔥🔥🔥🔥🔥 Dedication level🔥🔥🔥🔥🔥🔥🔥 pic.twitter.com/A71oBO80iO
— PrabhakaranKumar (@PrabhakaranKu18) August 16, 2021