பிரபல தமிழ் நடிகர் மருத்துவமனையில் அனுமதி- பதறிய திரையுலகினர்
தமிழ் சினிமாவில் பூ படத்தின் பிரபலமானவர் நடிகர் ராமு. இவர் தொடர்ந்து நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
குணச்சித்ர நடிகருமான இவர், நீர்ப்பறவை, தங்கமீன்கள், பரியேறும் பெருமாள், கர்ணன், சூரரைப்போற்று உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிகர் ராமு திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதை தமிழ் நடிகர் காளி வெங்கட் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.