“குந்தவை குந்த வைத்தால் நல்லது” - மேடையில் த்ரிஷா பற்றி பேசிய பார்தீபன்
நடிகர் பார்தீபன் “குந்தவை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.” என பேசியது தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

விஜய் சங்கீதா
நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி இருந்தார். இது தவிர லண்டனில் இருந்து சென்னை வந்த சங்கீதா தனக்கு விஜய்யின் வீட்டில் வழக்கு முடியும் வரை உரிமை வேண்டும் என மறுபடியும் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த விவாகரத்து வழக்கு தற்போது ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில் விஜய் மற்றம் த்ரிஷா சில நாட்களுக்கு முன்னர் திருமண விழாவிற்கு ஒன்றாக சென்ற காணொளி சமூக வலைத்தள பக்கத்தில் தீபோல் பரவியது.
இதன் பின்னர் நேற்று மகளிர் தின விழா நிகழ்வில் விஜய் பேசிய ஒர்த் இல்லை என்ற விடயமும் தற்போது பெண்கள் மத்தியில் விவாதத்திற்குள்ளாகி உள்ளது.
இப்படி ஒரு பக்கம் பிரச்சனைகள் போய்கொண்டு இருக்க நடிகர் பார்தீபன் செய்தியாளர்கள் த்ரிஷாவை பற்றி கேட்ட கேள்விக்கு பதில் கொடுத்து பேசிய விடயம் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பார்தீபன் பேச்சு
இந்த நிலையில் அண்மையில் அண்மையில் ஒரு விழா நடத்தப்பட்டது. அதில் அவருடன் இவ்வளவு ஆண்டும் நடித்த நடிகைகள் பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
அதே நேரத்தில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷாவைப் பற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு பார்தீபன்“குந்தவையை இப்போ வீட்டுக்குள்ளேயே குந்த வைத்தால் நல்லது.

நிறைய பிரச்சினைகள் வராமல் இருக்கும் எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்ல முடியாது. சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர, அந்த கவிதைகளை வெளியில் சொல்லாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார்.
த்ரரிஷா பற்றி பார்தீபன் இப்படி ஓபனாக பேசிய விடயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |