நெப்போலியன் மகன் தனுஷ் வெளியிட்ட காணொளி... திருமண விமர்சனத்திற்கு சரியான பதிலடி
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷ் தற்போது காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் வருகின்ற நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெற இருக்கிறது.
தற்போது 25 வயதாகும் தனுஷிற்கு சதை தசைவு நோய் உள்ளதால் அவரால் நடக்க முடியாமல் இருக்கின்றார். ஆனால் அவரது தந்தையின் ஐடி நிறுவனத்தை அவர் தான் கவனித்து வருகின்றார்.
நடிகர் நெப்போலியன் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த செவிலியர் பட்டதாரி பெண் ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இதில் தனுஷ் வீடியோ கால் மூலமாக கலந்து கொண்டார்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் கெடுக்கின்றார்... பணத்திற்கு ஆசைப்பட்டு அப்பெண் தனுஷை திருமணம் செய்கின்றார் என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றது.
தனுஷ் வெளியிட்ட காணொளி
சமூகவலைத்தளங்களில் தன்னைப் பற்றி வந்த விமர்சனங்களுக்கு எந்தவொரு பதிலும் அளிக்காமல் இருந்த தனுஷ் தற்போது இன்ஸ்டாவில் காணொளி மூலம் பதில் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், தனது திருமண நிகழ்விற்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்மறையான விமர்சனங்களும் அதிகமாகவே வந்தது.
இது தனக்கு உத்வோகத்தையே அளித்துள்ளது. என்னால் எல்லாம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்டுகின்றேன்.
என்னைப் போன்று உள்ளவர்களுக்கு இதன் மூலம் நான் கூறுவது என்னவெனில், பலரும் உன்னால் முடியாது என்று கூறுவார்கள்... அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் முயற்சி செய்யுங்கள்.
மேலும் தன்னுடைய திருமணம் குறித்து தவறாக பேசியவர் வாயடைக்கும்படி நடந்து கொள்வேன் என்று தனுஷ் குறித்த காணொளியில் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |