ஓலைச்சுவடி வடிவில் பத்திரிக்கையா? நெப்போலியன் மகன் திருமணம் திகதி அறிவிப்பு
நடிகர் நெப்போலியன் மகன்- தனுஷின் திருமண திகதி மற்றும் இடம் அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகனாக கலக்கியவர் தான் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் டாப்பில் இருந்த காலப்பகுதியில் அரசியலிலும் ஈடுபாடு காட்டி வந்தார்.
நடிகர் நெப்போலியன் ஜெயசுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களில் நெப்போலியனின் மூத்த மகன்- தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார்.
அக்ஷயா- தனுஷ் திருமணம்
இந்த நிலையில், 25 வயதாகும் நெப்போலியன்- மகன் தனுஷ்க்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
முதலில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இது குறித்து தனுஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார்.
திருமண செய்தியை தொடர்ந்து தனுஷ் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்து விட்டன.
அந்த வகையில், தனுஷ் - அக்ஷயாவின் திருமண பத்திரிகை பழங்கால முறைப்படி ஓலைச்சுவடி வடிவில் அச்சடிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், இவர்களின் திருமணம் எதிர்வரும் நவம்பர் 7ஆம் திகதி, புதன்கிழமை ஜப்பானின் தலைநகரமான டோக்கியாவில் நடைபெறப்போவதாக கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |