அமெரிக்காவில் அம்பானியாக வாழும் நடிகர் நெப்போலியன்- சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
100 கோடிக்கு மேல் செலவழித்து மகனின் திருமணத்தை ஜப்பானில் பிரமாண்டமாக நடத்தி முடித்த நடிகர் நெப்போலியனின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன்
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகியவர் தான் நடிகர் நெப்போலியன்.
இவர், “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவில் இருந்த காலப்பகுதியில் கதாநாயகராகவும் மட்டுமல்லாது முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருப்பார்.
அதிலும் குறிப்பாக ரஜினிகாந்துக்கு வில்லனாக அவர் நடித்த “எஜமான்” திரைப்படம் நெப்போலியனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் எட்டுப்பட்டி ராசா, சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களில் கிரமாத்து நயாகனாக நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், சமீபத்தில் அவருடைய மகன் திருமணத்தை ஜப்பானில் மிக விமர்சையாக நடத்தி முடித்தார்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினம் அவருடைய 61 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ள வேளையில், நெப்போலியன் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், மகனின் திருமண செலவு மாத்திரம் ரூ.150 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அமெரிக்காவில் ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனிடம் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகின்றது.
நெப்போலியன் வீட்டில் டெஸ்லா, பென்ஸ், டொயோட்டா உள்பட நான்கு சொகுசு கார்கள் உள்ளன. இதில் இரு மகன்களுக்கு தனித்தனி கார், மற்றும் தன் சொந்த உபயோகத்திற்காக ஒரு கார் வைத்திருக்கும் நெப்போலியன், குடும்பத்துடன் அவுட்டிங் செல்ல தனி வேன் ஒன்றை வைத்திருக்கிறார். அதில் தன் மகனுக்காக லிஃப்ட் வசதியையும் செய்து வைத்துள்ளாராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |