விவாகரத்து பயத்தை காட்டி கண்டிஷன் போட்ட நாகர்ஜுனா - 30 வருடமாக காப்பாற்றும் அமலா
நடிகர் நாகார்ஜுனா, தன்னுடைய இரண்டாவது மனைவி- அமலாவுக்கு திருமணத்திற்கு முன்னர் போட்ட கண்டிஷனை குட்டி பத்மினி ஓபனாக கூறியுள்ளார்.
நடிகர் நாகார்ஜுனா
தெலுங்குத் திரையுலகத்தில் தனித்துவமாக தனது வாழ்க்கைப் பயணத்தை நடத்தியவர் மறைந்த நடிகர் அக்கினேனி ஏ.நாகேஸ்வரராவ்.
அவர் மீதும் அவருடைய படங்கள் மீதும், அவரது குடும்பத்தின் மீதும், தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு இன்றளவும் தனி மரியாதை உண்டு.
அதே சமயம் அக்கினேனி குடும்பத்தில் உள்ள பலருக்கும் அவர்களது முதல் திருமணம் வெற்றிகரமாக அமையாமல் விவாகரத்தில் முடிந்தது தான் காலத்தின் முடிவாக உள்ளது.
நாகேஸ்வரராவின் மகன் நடிகர் நாகார்ஜுனா, பிரபல தயாரிப்பாளர் டி.ராமாநாயுடுவின் மகளும், நடிகர் வெங்கடேஷின் சகோதரியுமான லட்சுமியை முதல் திருமணம் செய்து, பின்பு நடிகை அமலா மீது காதல் கொண்டதும் லட்சுமியை விவாகரத்து செய்துவிட்டார்.
நாகார்ஜுனா, லட்சுமி தம்பதியினரின் மூத்தமகன் தான் நாக சைதன்யா. இவருக்கு தற்போது சமந்தாவுடன் விவாகரத்து ஆகியுள்ளது. நாகார்ஜுனா, அமலா தம்பதியினருக்கு அகில் என்ற மகள் இருக்கிறார்.
நாகார்ஜுனா போட்ட கண்டிஷன்
இந்த நிலையில், நடிகர் நாகார்ஜுனா அமலா எப்படி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற கதையை குட்டி பத்மினி பேட்டியொன்றில் ஓபனாக பேசியுள்ளார்.
அதாவது, “ நாகர்ஜுனாவுக்கு பெண்கள் ஒல்லியாக இருந்தால் தான் பிடிக்கும். இதனால் தன்னுடைய இரண்டாவது மனைவி அமலாவுக்கு, “ உன்னுடைய எடையை நீ ஏற்ற கூடாது, இப்போது எப்படி இருக்கிறாயோ அப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டும்..” என கண்டிஷன் போட்டுள்ளார்.
இதனை தவறும் பட்சத்தில் நமது வாழ்க்கை விவாகரத்தில் கூட முடியலாம் என முன்பே பயம் காட்டி விட்டார். தற்போது அவர்களுக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகின்றது. தற்போதும் கூட டயட், மற்றும் உடல் பயிற்சி செய்து கஷ்டப்பட்டு தன்னுடைய எடையை அமலா மெயின்டெய்ன் செய்து வருகிறார்...” என கூறியுள்ளார்.
குட்டி பத்மினி கூறியதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |