58 வயதில் 3வது டிகிரி பெற்று அசத்தியுள்ள தமிழ் நடிகர்.., யார் தெரியுமா?
தனது 58 வது வயதில் 3வது டிகிரி பெற்று சாதித்தவர் பிரபல தமிழ் திரைப்பட நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் முத்துக்காளை ஆவார்.
58 வயதில் 3வது டிகிரி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் நடிகர் முத்துக்காளை. இவர் சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்தார்.
18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் பெற்ற இவர், முதலில் திரைத்துறையில் ஸ்டண்ட் மாஸ்டராகப் பணியாற்றினார். பின்னர், நகைச்சுவை நடிகராகப் பிரபலமானார்.
ஒரு கட்டத்தில் மது பழக்கத்திற்கு அடிமையான முத்துக்காளை, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்.
அதன்பிறகு, கல்வியில் கவனம் செலுத்தத் தொடங்கி, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இளங்கலை வரலாறு பட்டமும், 2019ஆம் ஆண்டு தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
தற்போது தனது 58வது வயதில் இளங்கலை தமிழ் இலக்கியத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று மூன்றாவது பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் பேசிய முத்துக்காளை, மது பழக்கத்திலிருந்து மீண்ட கடந்த 10 ஆண்டுகளில் மூன்று பட்டங்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மது பழக்கத்திலிருந்து மீள பலருக்கு உதவி வருவதாகவும் கூறினார்.
படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று கூறிய அவர், மாணவர்கள் படிக்க வேண்டிய வயதிலேயே கல்வியை முடித்துவிட வேண்டும் என அறிவுறுத்தினார்.