Breaking: நடிகை மீனாவின் கணவர் திடீர் உயிரிழப்பு - அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை மீனா வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். இதனிடையில், மீனா தன்னுடைய கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பாதிப்படைந்தனர். அதன் பின்னர் கொரொனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது இருந்துவந்ததால் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
மேலும், நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்காள சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் தற்போது காலமாகியுள்ளார். இவரின் மறைவுக்கு திரையுலகினர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.