படப்பிடிப்பில் மயங்கி விழுந்த பிரபல நடிகர்- அவசரமாக மருத்துவமனையில் அனுமதி
நடிகரும் - தயாரிப்பாளருமான கே.சி.பிரபாத் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்த காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சினிமா
நடிகர் ஆர்கே சுரேஷ் நடிப்பில், கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான “பில்லா பாண்டி” திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகியவர் தான் கே சி பிரபாத்.
இந்த படத்தில் முரட்டுத்தனமாக வில்லனாக நடித்து அசத்தியிருப்பார்.
இதனை தொடர்ந்து, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி, அங்காரன், போன்ற பல படங்களில் வில்லனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.
இவர் வில்லனாக நடித்தாலும் இவரின் வில்லத்தனத்தை பார்த்து ரசிப்பதற்காகவே ரசிகர்கள் இருக்கிறார்கள்.
மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி
இந்த நிலையில், கே.சி.பிரபாத் நடித்து வரும் 'யாமம்' என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பிரபாத்தை உடனடியாக பட குழுவினர் அருகிலுள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தற்போது அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நலத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பிரபாத் இரவு நேர படப்பிடிப்பில் இருந்ததாகவும், இதனால் உருவாகிய அழுத்தம் காரணமாக தான் இந்த மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரபாத் நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு பெட்டி' திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 18ஆம் தேதி திரைக்குள் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |