விஜயகாந்த்துடன் கமல்ஹாசன் நடித்தது தெரியுமா? பலரும் அறியாத புகைப்படம்
நடிகர் விஜயகாந்த் உடன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜயகாந்த்
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நல குறைவினால் உயிரிழந்த நிலையில், இவரை நினைத்து தற்போதும் ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர்.
தனது நடிப்புத்திறமையினால் மட்டுமின்றி எளிமையான அரசியல் தலைவராக மக்கள் மனதில் குடிகொண்டவர் தான் விஜயகாந்த். பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கும் இவரது இறப்பு ரசிகர்கள் பலரும் இவரின் பழைய நினைவுகளை தற்போது வெளிக் கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விஜயகாந்தின் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
கடந்த 1986ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் மனக்கணக்கு என்ற திரைப்படத்தில் கமல்ஹாசன் ஒரு சின்ன கேமியோ கதாபாத்திரம் ஏற்று நடித்திருப்பார்.
இந்த ஒரே ஒரு திரைப்படத்தில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் விஜயகாந்துடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |