சிறுவனாக பார்த்த நடிகர் ஜீவாவின் மகனா இது? வாயடைக்க வைத்த தற்போதைய புகைப்படம்
சிறுவனாக இருந்த நடிகர் ஜீவாவின் மகன் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஜீவா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் ஜீவா பல படங்களில் நடித்துள்ளார். ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை என நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
இவர் சமீபத்தில் நடித்த தலைவர் தம்பி தலைமையில் என்ற படம் பொங்கலுக்கு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தை மலையாள இயக்குநர் நிதீஸ் சஹதேவ் இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள இப்படம் மாபெரும் வசூலையும் பெற்றது.

இப்படத்தின் வெற்றியினை சமீபத்தில் படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர். இதில் மற்ற திரையுலக நட்சத்திரங்களும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இத்தருணத்தில் நடிகர் ஜீவா தனது மகனை மேடைக்கு அழைத்துள்ளார். ஜீவாவின் மகனை மேடையில் அவதானித்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

ஏனெனில் சிறுவனாக பார்த்த ஜீவாவின் மகன் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டார். சிறுவனாக பார்த்த ஜீவாவின் மகனா இது? என கேள்வி எழுப்புகின்றனர். சிலர் ஜீவாவின் மகனா அல்லது சகோதரரா? என்றும் கேள்வி கேட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |