அந்தரங்க காணொளியினை வெளியிடுவதாக மிரட்டல்... சித்ராவை போன்று எனக்கு நடந்துவிடக்கூடாது! பிரபல நடிகை கதறல்
முதல் திருமணத்தினை மறைத்து தன்னை காதலித்ததாக உதவி இயக்குனர் ஒருவர் பிரபல நடிகையின் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், தனது தரப்பு நியாயத்தை குறித்த நடிகை வெளியிட்டுள்ளார்.
சின்னத்திரை நடிகையான ஜெனிபர்(24), உதவி இயக்குனரான நவீன் குமார் என்பவரைக் காதலித்து வந்துள்ளதாக கூறப்பட்டது.
ஜெனிபருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சரவணன் என்பவருக்கும் திருமணமாகிய நிலையில், அவரைவிட்டு பிரிந்ததையும் திருமணம் ஆனதையும் மறைத்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெனிபர் வீட்டிற்கு அடியாட்களுடன் சென்ற நவீன்குமார் அவரது தங்கையை மானபங்க படுத்தியதுடன், தந்தையை அடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து பொலிசில் புகார் அளித்து நடிகை, தனது முதல் கணவருடன் சேர்ந்துகொண்டு உதவிஇயக்குனர் நவீன் குமார், இவர்களுடன் கார்த்தி என்பவரும் சேர்ந்து கொண்டு தனது தங்கையை மானபங்கம் படுத்தியதுடன், தனது தந்தையையும் தாக்கியுள்ளனர்.
மேலும் தனது அந்தரங்க காணொளியினை இணையத்தில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி வருவதோடு, தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவைப் போன்று, ஆகிவிடக்கூடாது என்பதற்காக இவ்வாறு செய்தியாளர்களை சந்தித்து நடந்ததைக் கூறியுள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.