ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷின் சொத்து விபரம் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஜிவி பிரகாஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். சிறுவயதிலிருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்ட ஜிவியை ஏ.ஆர்.ரகுமான் அறிமுகப்படுத்தினார்.
ஏ.ஆர். ரகுமான் ஜிவி பிரகாஷின் தாய் மாமா தானாம். ஜென்டில் மேன் படத்தில் இடம்பெற்ற சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் ஜிவி பாடிய முதல் பாடலாகும்.
கடந்த 2006ம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு பாடல்கள் எழுதி அசத்தினார்.
தற்போது படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த 2013ம் ஆண்டு தனது பள்ளி தோழியான சைந்தவியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், திருமணமாகி 11 வருடங்கள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
சொத்து மதிப்பு என்ன?
இந்நிலையில் இன்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிற்கு ரூ. 80 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இதுதவிர பல சொகுசு கார்களையும் இவர் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |