அது தானே நம் வேலை - போயஸ் கார்டன் வீடு மீம் பற்றி நக்கலாக பேசிய தனுஷ்
தனுஷ் போயஸ் கார்டன் வீடு வாங்கியது குறித்து பேசியது சமூக வலைதளத்தில் மீம்ஸ் ட்ரோல் செய்வது குறித்து நடிகர் தனுஷ் பேசி உள்ளார்.

போயஸ் கார்டன் வீடு
தனுஷ் நடித்துள்ள கர படத்தின் இசை வெளியீட்டு நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தனுஷ் பல விடயங்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.
அதன்போது தான் போயஸ் கார்டனில் வீடு வாங்கியது குறித்தும் தான் ட்ரோல் செய்யப்பட்டது குறித்தும் தனுஷ் இந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இபப்டத்தின் ஆடியோ லாஞ்ச் நேற்று நடைபெற்றது.
இதன்போது தனுஷ் போயஸ் கார்டின் ட்ரோல் பற்றி பேிசினார். கடந்த சில ஆண்டுகளுககு முன்பும் இதை பற்றி தனுஷ் பேசியது குறிப்பிட தக்கது.
முன்னர் பேசிய போது 'நான் எல்லாம் போயஸ் கார்டரில் வீடு வாங்க கூடாதா' என்ற வாசம் சமூக வலைத்தள பக்கத்தில் வைரலானது. இதை தான் தனுஷ் பேசி இருக்கிறார்.

குட்டி கதை சொன்ன தனுஷ்
அது பற்றி பேசிய தனுஷ் "அதை எப்படி எடுத்துக்கொள்வோம் என்பது நம் கையில் தான்.
நான் ஏர்போர்ட் செல்லும்போதும் பஸ் டிரைவர் என்னிடம் செல்பி எடுக்க வேண்டும் என கேட்டார். போட்டோ எடுத்தபின் ஒரு விஷயம் சொன்னார்." "தம்பி நான் யாரிடமும் செல்பி கேட்டதில்லை.

உங்களிடம் தான் முதல் முறை எடுத்துக்கொள்கிறேன். அதற்கு காரணம். நீங்க போயஸ் கார்டன் வீட்டை பற்றி பேசியது என் மகனுக்கு motivation ஆக இருக்கிறது.
அவன் inspire ஆகி பயங்கரமாக வேலை செய்கிறான் என கூறினார்." "அதனால் inspiration ஆக எடுத்துக்கொள்ளலாம். அல்லது மீம் மெட்டிரியல் ஆக மாறினாலும்.
அது entertainment தான். அது தானே நம் வேலை. அதுவும் ஓகே தான்." "ஏன் நானெல்லாம் போயஸ் கார்டனில் வீடு வாங்கக்கூடாதானு சொல்ல கூடாதா?"என தனுஷ் பேசினார் .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |