இயக்குனர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம்- இறுதி சடங்கிற்கு கூடிய சொந்தங்கள்
நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட் வீட்டில் துக்கம் சம்பவம் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
போஸ் வெங்கட்
“மெட்டி ஒலி” என்ற தொடர் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் தான் போஸ் வெங்கட்.
தன்னுடைய யதார்த்தமான நடிப்பால் சீரியல்கள் ஒலிப்பரப்பான நேரத்தில் அனைத்து குடும்பங்களிலும் ஒருவராக இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து வெள்ளத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைக்க முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
பின்னர் கோலிவுட்டில் முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் இணைந்தும் நடித்திருக்கிறார். “கன்னிமாடம்” என்ற படத்தினையும் இயக்கியிருக்கிறார்.
நடிகராக இருந்து இயக்குநராக உருவெடுக்கும் போஸ் வெங்கட்டின் இயக்கத்தில் விமல் நடிப்பில் புதிய படமொன்று தயாராகவுள்ளது.
திடீர் துக்கம் சம்பவம்
இந்த நிலையில், நேற்றைய தினம் போஸ் வெங்கட்டின் இரண்டாவது படமான “ Sir” திரைப்படம் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், வெங்கட் வீட்டில் ஒரு துக்க சம்பவம் நடந்துள்ளது. அவரது தாய் ராஜாமணி வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மாலை 5 மணியளவில் காலமானார்.
அவருக்கு தற்போது வயது 83. அவரது இறுதி சடங்குகள், போஸ் வெங்கட்டின் சொந்த ஊரான அறந்தாங்கியில் இன்று மாலை நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இயக்குநரின் குடும்பத்தினருக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |