24 வயது காதலியுடன் 57 வயது நடிகர் போட்ட ஆட்டம்... வைரல் காணொளி இதோ
நடிகர் பப்லு தனது காதலியுடன் மொட்டை மாடியில் நடனமாடியுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் பப்லு
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் பிரபல நடிகராக வலம்வரும் பப்லுவிற்கு 57 வயதாகின்றது. இவர் 24 வயது இளம்பெண் ஒருவருடன் லிவ் இன் டூ கெதர் உறவில் இருந்து வருகின்றார்.
இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமின்று கடுமையான விமர்சனத்தை பெற்று வந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சமீபத்தில் பேட்டி ஒன்று பப்லு பதிலடி கொடுத்தார்.
அவர் பேசுகையில், ‘நான் இளம் பெண்ணை திருமணம் செய்வதால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எனக்கு ஒரு பெண் துணை வேண்டும் என்பதற்காக நான் அவருடன் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் 57 வயதிலும் அவர் சீரியலில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாகவும் இருந்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் பப்லு தனது இளம் காதலியுடன் மொட்டை மாடியில் தெலுங்கு பாடல் ஒன்றுக்கு செம டான்ஸ் ஆடியுள்ளார். இந்த காணொளி லைக்ஸை குவித்து வரும் நிலையில், கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
