23 வயது பெண்ணை இரண்டாம் திருமணம் செய்த 56 வயதான நடிகர் பப்லு! மணப் பெண் எந்த நாட்டை சேர்ந்தவர் தெரியுமா?
57 வயதான நடிகர் பப்லு பிரித்விராஜ் திடீரென்று 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
வாரணம் ஆயிரம்', 'பயணம்', 'பாண்டிய நாட்டு தங்கம்', 'சிகரம்', 'அழகன்' உள்பட பல படங்களில் நடிகர் பப்லு பிரித்விராஜ் நடித்து இருக்கிறார்.
இவருக்கு பீனா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர்.
இவருடைய மகன் ஆட்டிசம் குறைபாடு உடையவர். இதனால் பப்லு மன உளைச்சலில் இருந்தார்.
மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணுடன் 2ஆவது திருமணம்
அதே நேரம் மகனையும் கவனித்து வந்தார். இது தொடர்பாக அவரது மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் பப்லு மலேசியாவைச் சேர்ந்த 23 வயது பெண்ணை சில மாதங்களுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.