நடிகர் அருண் விஜய்யின் பிள்ளைகளா இவங்க? எவ்வளவு பெருசா வளர்ந்துட்டாங்க...
நடிகர் அருண் விஜய் குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அருண் விஜய்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால் அது விஜயகுமாரும் மஞ்சுளாவும்தான். விஜயகுமாரின் முதல் தாரத்தின் மகன்தான் அருண் விஜய்க்கு சமீபத்தில் படவாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், அஜித் நடிப்பில் வேதாளம் படத்தில் நடித்து மாஸ் காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இவருக்கு அர்ணவ் என்ற ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். தற்போது நடிப்பில் அசத்திவரும் அருண்விஜய் அவ்வப்போது குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகின்றார்.

தற்போது மகன், மகள் மற்றும் மனைவியை அழைத்துக் கொண்டு திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சென்றுள்ளனர். பொதுவாக விஐபி-க்கள் வாகனத்தில் நேரடியாக சென்று சுவாமியை தரிசிப்பார்களாம்.

ஆனால் அருண் விஜய் நடந்தே சென்று சாமியை தரிசனம் செய்துள்ளார். அவர் மட்டுமின்றி அவரது குடும்பமும் நடந்து சென்றுள்ளனர். இவர்கள் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது..


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |