குட்டி ரசிகைக்கு அஜித் கொடுத்த சர்ப்ரைஸ்... வைரலாகும் காட்சி
நடிகர் அஜித் தனது குட்டி ரசிகையின் டீ சர்ட்டில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது காணொளியாக வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித், ஷாலினி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் அஜித், இன்றும் ரசிகர்கள் கொண்டாடப்படும் உச்ச நடிகராக இருந்து வருகின்றார்.
1999ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் அஜித்துடன் ஷாலினி நடித்துள்ளார். அப்பொழுது இருவருக்கும் காதல் ஏற்பட்ட நிலையில், வீட்டில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 2000ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், நடிகர் அஜித் சினிமா மட்டுமின்றி கார் ரேஸிலும் கலந்து ரசிகர்களை வென்று வருகின்றனர்.
தற்போது கார் ரேஸ் உடையில் இருந்த அஜித், தன்னை பார்க்க வந்த குட்டி ரசிகைக்கு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |