பாத்ரூமில் மர்மமாக இறந்து கிடந்த பிரபல நடிகர்! அதிர்ச்சியளிக்கும் காரணம்
பிரபல பாலிவுட் நடிகரான ஆதித்யா சிங் ராஜ்புத் கழிவறையில் இறந்து கிடந்துள்ளது பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத்
பன்முகத் திறமை கொண்ட நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத், மாடலும், காஸ்டிக் ஒருங்கினைப்பாளர், நடிகர் என பல திறமைகளைக் கொண்டுள்ளார்.
டெல்லியை சேர்ந்த ஆதித்யா, ‘கிராந்திவீர்’ மற்றும் ’மைனே காந்தி கோ நஹி மாரா’ போன்ற படங்களில் நடித்துள்ளார். இது மட்டுமின்றி பல ரியாலிட்டி நிகழ்ச்சி, ரிவி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். இயக்குநராக பணியாற்றிய ஆதித்யா, பல நடிகர்கள் மற்றும் நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.
17 வயதில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஆதித்யா, டெல்லியில் பிறந்து வளர்ந்த நிலையில், இவரது குடும்பத்தினர் உத்தரகாண்டில் இருந்து வருகின்றனர். இவருக்கு மூத்த சகோதரி ஒருவரும் இருக்கின்றார்.
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர் இன்று வீட்டின் கழிவறையில் இறந்த கிடந்துள்ளார். எதார்த்தமாக இவரது நண்பர் வந்து அவதானித்த நிலையில், உடனே மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு இவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். இவரது இறப்பிற்கு காரணம் போதை மருந்தை அதிகமாக பயன்படுத்தியதே என்று கூறப்படுகின்றது.