“காதலிக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தேன்..” இரகசியத்தை உடைத்த அப்பாஸ்!
தன்னுடைய காதலிக்கு 45 நிமிஷம் முத்தம் கொடுத்தாக நடிகர் அப்பாஸ் அவர்கள் கூறியுள்ளார்.
நடிகர் அப்பாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் அப்பாஸ். இவர் தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” என அழைக்கப்பட்டார்.
கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான “காதல் தேசம்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி பல சூப்பர் ஹீட் படங்களை கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 2001 ஆம் ஆண்டு எராம் அலி என்ற பேஷன் டிசைனர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர்.
45 நிமிடங்கள் முத்தம் கொடுத்தேன்..
நியூசிலாந்தில் செட்டிலான அப்பாஸ் சமீபத்தில் ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “நான் பாடசாலையில் படிக்கும்போது ஒரு பெண்ணுக்கு 45 நிமிடம் முத்தம் கொடுத்திருக்கிறேன். இந்தி மியூசிக் வீடியோ பண்ணும்போது ஒரு முத்த காட்சியில் நான் நடித்தேன்.
அப்போது தான் இந்த சம்பவம் நடந்தது. ஒரு கட்டத்தில் எனக்கும் அந்த நடிகைக்கும் முத்த காட்சி போர் அடித்து விட்டது. ” என புன்னகையுடன் இன்னும் பல சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மேலும் செய்தி பார்த்த இணையவாசிகள், “ அந்த காலத்தில் நீங்க கொடுத்து வைத்தவர் சார்...” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |