விபத்து ஏற்படுவது போன்று கனவு ஆபத்தின் அறிகுறியா? பலரும் அறியாத உண்மை
விபத்து ஏற்படுவது போன்று கனவு கண்டால் இவை சுபமா அல்லது அசுபமா என்பதைக் குறித்த இங்கு தெரிந்து கொள்வோம்.
பொதுவாக விபத்து என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் நடுக்கம் தான் ஏற்படும். அந்த அளவிற்கு வார்த்தையே நம்மை பயமுறுத்தும் நிலையில், இவற்றினை கனவில் கண்டால் அது எந்த மாதிரியான அறிகுறி என்பது பலருக்கும் தெரிவதில்லை.
விபத்து குறித்து வரும் கனவுகள்
உங்களது கனவில் ரயில் விபத்து கண்டால், பெரும் நிதி இழப்பை சந்திக்கப் போகிறீர்கள் என்று அர்த்தமாம். அதுமட்டுமில்லாமல் வருமானத்தில் பின்னடைவு, கடன் கொடுத்தவர்களிடம் வசூலிக்க முடியாத நிலை, வியாபாரத்தில் இழப்பு இவைகளுக்கான அறிகுறியாகும்.
பைக் விபத்து ஏற்பட்டால், நீங்கள் சண்டையில் ஈடுபடப்போகிறீர்கள் என்றும், சிறை செல்வதற்கான அறிகுறி என்பதை தெரிந்து கொள்ளவும்.
கார் விபத்தை கனவில் கண்டால், உடல்நலக் குறைவின் அறிகுறியாம். இத்தகைய கனவுகள் கண்டால் மருத்துவரிடம் சென்று சரியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமாம்.
கனவில் வேறொருவரின் விபத்தினை கண்டால், இது மோசமான அறிகுறியாம். எதிர்காலத்தில் சில பிரச்சினைகளை சந்திக்கக் கூடும் என்று அறிவியலில் கூறப்படுகின்றது. பொய் வழக்கு போடும் அபாயமும் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |