Lottery: வெளிநாட்டில் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டிய பணம்! எத்தனை மில்லியன்?
இந்தியாவை சேர்ந்த சந்தீப் குமார் பிரசாத் என்பவருக்கு அபுதாபியில் நடந்த லொற்றரியில் பரிசு கிடைத்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறாராம்.
இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் சந்தீப் குமார் பிரசாத்(வயது 30), துபாயில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கு மனைவி, இரண்டு சகோதரரர்கள் மற்றும் ஒரு சகோதரி இருக்கின்றனர், இவர்கள் குடும்பமாக இந்தியாவில் வசித்து வருகின்றனர்.
இவருக்கு அபுதாபியில் நடந்த லொற்றரி குலுக்கலில் பரிசு கிடைத்துள்ளது, அதாவது 15 மில்லியன் திர்ஹாம் பரிசாக கிடைத்துள்ளது.
இதுகுறித்து அவர், என் வாழ்க்கையில் இவ்வளவு மகிழ்ச்சியான தருணத்தை சந்தித்தில்லை, இதுவே முதன்முறை.
கடந்த மாதம் 19ம் திகதி லொற்றரி டிக்கெட் வாங்கினேன், 3ம் திகதி நடந்த குலுக்கலில் எனக்கு பரிசு கிடைத்துள்ளதாக தொகுப்பாளர் அறிவிக்க என் வாழ்க்கையே மாறிவிட்டது.
பரிசை வென்றுள்ளதால் குடும்பத்துடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறது, தாயகம் திரும்பி சொந்தமாக தொழில் செய்யவும் விருப்பமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
