கின்னஸ் சாதனை படைத்த குழந்தை நட்சத்திரம்! யார்னு தெரியுமா?
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக இருக்கின்றது. ஆம் பெரியவர்களும் குழந்தைகளின் உலகத்திற்கே சென்று வரலாம்.
அந்த அளவிற்கு குழந்தைகளின் சுட்டித்தனம் நிறைந்து காணப்படுகின்றது. அவர்கள் செய்யும் குறும்புத்தனம் பெரியவர்களை கவலைகளை மறக்க செய்கின்றது.
இந்த சீரியல் முகிலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்திஷ் தற்போது 60 நொடிகளில் 60 கார்ட்டூன் பெயர்களை சொல்லி உலக அளவில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

சாதனை படைத்த நித்திஷ்
இந்த சீரியலில் முகிலன் கதாபாத்திரத்திற்கு நித்திஷ் என்ற சிறுவன் நடித்து வருகின்றார். இவரின் குறும்புத்தனம், தந்திரம் இவற்றினை அடித்துக்கொள்ள வேறு சிறுவர்கள் இல்லை என்றே கூறலாம்.
இந்நிலையில் நித்திஷிற்கு கார்ட்டூன் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதனை வைத்தே எதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்த நித்திஷ் வெறும் 60 நொடியில் 60 கார்ட்டூன் கதாபாத்திரத்தினைக் கூறி உலக சாதனை படைத்துள்ளார்.

குவியும் வாழ்த்துக்கள்
அவ்வப்போது தன்னுடைய மிமிக்ரி மற்றும் டைமிங் காமெடி போன்றவற்றையும் சக சீரியல் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் போன்றவற்றை பதிவிட்டு எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் தற்போது நித்திஷ் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையை குறித்து பலரும், அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களையும் தங்களது தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

கொள்ளை அழகில் ஜொலிக்கும் ஏ.ஆர்.ரகுமானின் மனைவி