15 வருட காதல்.. சீக்கிரமே திருமணம்- விஷாலை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு அபிநயா முற்று
விஷாலை காதலிப்பதாக வெளியான வதந்திக்கு அபிநயா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
விஷால் - அபிநயா காதல் விவகாரம்
தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு திறமையால் பல கோடி ரசிகர்களுக்கு சொந்தக்காரரான நடிகர் விஷாலிற்கும் வாய் பேச முடியாத நடிகை அபிநயாவிற்கு காதல் ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் அபிநயா ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் இந்த விடயம் சினிமா வட்டாரங்களில் மிக வேகமாக பரவியது.
உண்மையை உடைத்த அபிநயா
தமிழ் ஊடகம் ஒன்றிற்கும் அவர் பேட்டியில், “ நான் பதினைந்து வருடங்களாக காதலித்து வருகிறேன். சிறுவயது முதல் நண்பர்களாக இருந்தோம். அதன் பின்னர் காதலர்களாக மாறியிருக்கிறோம். அவரிடம் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் கூறலாம்..” என மகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
அத்துடன், விஷாலூடன் திருமணம் குறித்து வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அபிநயா, “ விஷால் ஒரு சிறந்த நபர், பலருக்கும் உதவி செய்வார். எனக்கு அவர் மீது பெரிய மரியாதை உள்ளது. அவரமும் என்னை பார்த்தால் மகிழ்ச்சியாகி விடுவார். அவருக்கு வைரஸ் காய்ச்சல் வந்த போதும் நலம் விசாரித்தேன். அதற்கு அவர் நலமாக இருப்பதாக பதில் கொடுத்தார்..” என பேசியுள்ளார்.
அபிநயா பேட்டியின் பின்னர் விஷால்- அபிநயா பற்றிய வதந்திகளுக்கு ஒரு தீர்வு கிடைத்துள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |