ஆவணி மாதத்தில் பேரதிர்ஷ்டம்... தட்டித் தூக்கும் 5 ராசிகள் யார் தெரியுமா?
சூரிய பகவானின் ஆதிக்கம் பிறந்திருக்கும் ஆவணி மாதம் முழுவதும் நிறைந்திருக்கும் நிலையில், இந்த மாதத்தில் சுப காரியங்களையும் செய்ய சிறந்த மாதமாக இருக்கின்றதாம்.
இந்நிலையில் எந்தெந்த ராசிகள் இந்த மாதத்தில் பேரதிர்ஷ்டத்தினை பெற உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினரைப் பொறுத்தவரையில் இந்த ஆவணி மாதம் அனுகூலமான மாதமாகும். செய்யும் தொழில், வியாபாரம் என அனைத்திலும் லாபம் கிடைப்பதுடன், குடும்ப உறவுகளிலும் அன்பு அதிகரிக்கும். இம்மாதத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வங்களை வழிபட்டால் இன்னும் சிறப்பாகவே இருக்கும்.
மிதுனம்
தொட்ட காரியங்கள் அனைத்தும் இந்த மாதம் வெற்றியாகவே மிதுன ராசியினருக்கு இருக்கும். தொழில், வியாபாரம், கல்லி அனைத்திலும் சாதகமான நிலை ஏற்படுவதுடன், பதவி உயர்வும் கிடைக்கும். ஞாயிற்றுகிழமை குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு இந்த ஆவணி மாதம் உத்தியோகத்தில் நல்ல செய்தி கிடைப்பதுடன், வேலை தேடுபவர்களுக்கும் வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கின்றது. தொழில் தொடங்குபவர்களுக்கும் சிறப்பாக அமையும். தேவையில்லாத விடயங்களில் தலையிட வேண்டாம். வீண் வாக்குவாதம் ஏற்படும். இம்மாதத்தின் புதன் கிழமை தோறும் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபடவும்.
துலாம்
ஆவணி மாதத்தில் துலாம் ராசியினருக்கு நன்மையும், நற்செய்தியும் கிடைப்பதுடன், தொழிலில் இருக்கும் தடையும் நீங்கும். பதவி உயர்வு குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். அனைத்து வேலையிலும் வெற்றியும் பெறும் நீங்கள் இம்மாதத்தில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்தை வழிபடவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியைப் பொறுத்த வரையில் இம்மாதம் தரமானமாதமாகும். வீடு, தொழில், வேலை விடயங்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதுடன், சில தருணங்களில் கவனமாகவும் செயல்பட வேண்டும். இம்மாதத்தில் சனிக்கிழமை தோறும் இஷ்ட தெய்வம், குலதெய்வத்தினை வழிபடவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |