புதிய காதலியுடன் ரவி மோகன்! வைரலாகும் மனைவி ஆர்த்தி வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும், ரவி மோகன். கடந்த ஆண்டு திருமண விவாகரத்து சரச்சையில் சிக்கி இவர், இப்போது தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், அவர் தற்போது தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா திருமண நிகழ்ச்சியில் அவரது தோழி மற்றும் காதலி என்ற சர்சையில் சிக்கியய கெனிஷா பிரான்சிஸூடன் ஜோடியாக கவந்துக்கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.அதனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி ஒரு பரபரப்பான அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறார்.
ரவி மோகன்
தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் பட்டியலில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் ரவி மோகன். கடந்த ஆண்டு இறுதியில் திடீரென பெயரை மாற்றினார், இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் தனித்துவமான பாணியில் இருப்பதால் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
இவரது நடிப்பில் கடைசியாக காதலிக்க நேரமில்லை திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகின்றது.
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கராத்தே பாபு திரைப்படத்திலும் ரவி மோகன் நடித்து வருகிறார்.
ரவியின் விவாகரத்து அறிவிப்பு வெளியான சமயத்தில், இன்னொரு விஷயமும் வெளியானது. அது ஒரு புகைப்படம் ஆகும். இதில் அவர் கோவாவை சேர்ந்த கெனிஷா என்ற பாடகியுடன் இருந்தார்.
இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து அனைத்து ஊடகங்களும் இருவரும் காதலிக்கின்றனரா என கிசுகிசுக்களை பரப்ப தொடங்கின. இருவரும் தாங்கள் வெறும் நண்பர்கள்தான் என்றும், அதைத்தாண்டி தங்களுக்குள் ஒன்றும் இல்லை என்றும் கூறினர்.
சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமனம் நடந்தது. இதில், கோல்டன் நிற ஆடை அணிந்து ரவி மோகனும் கெனிஷாவும் கலந்து கொண்டனர்.
போதாக்குறைக்கு இருவரும் கைக்கோர்த்துக்கொண்டு வேறு சென்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது. ஆர்த்தி அறிக்கை இந்நிலையில் ஆர்த்தி, தற்போது ரவி மோகன் குறித்து ஒரு பரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், தான் இத்தனை நாட்களாக அனைத்தையும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருந்ததாகவும், இனி தன்னால் அப்படி இருக்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
18 வருடமாக அனைத்து விஷயங்களிலும் தான் துணையாக இருந்த தனது கணவர் இன்று அவரது பொருப்புகளில் இருந்து தவறியிருப்பதாக கூறியிருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
