ஆர்த்திக்கு ஆறுதலும் கூறும் விவாகரத்தான பாடகி- குஷ்பூவும் உடந்தையா?
ஜெயம் ரவி மனைவிக்கு ஆறுதல் கூறும் வகையில் பாடகி சைந்தவி மற்றும் குஷ்பூ போட்ட பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
இவர் மோகன் ராஜா இயக்கியத்தில் வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இதனிடையே கோலிவுட் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஜெயம் ரவி, கடந்த 2009 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
திருமணம் முடிந்து சுமாராக 15 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்து வரும் ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிகளுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
விவாகரத்து சர்ச்சை
இப்படியொரு நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Brother படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதியினர் விவாகரத்து சர்ச்சை பாரியளவில் வெடித்து கொண்டிருக்கிறது. மாறாக ஜெயம் ரவி சென்ற கோவா பயணம் குறித்து ஏகப்பட்ட சலசலப்புகள் வெளியாகி வருகின்றது.
விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் வெளியில் வந்த ஜெயம் ரவி ஒரு முடிவுகளை மீடியாக்களிடம் ஓபனாக கூறியுள்ளார். அத்துடன் விவாகரத்தில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஆர்த்தி மீண்டும் அறிக்கையொன்றை பகிர்ந்துள்ளார்.
ஆறுதல் கூறும் விவாகரத்தான பிரபலம்
இந்த நிலையில், ஆர்த்தியின் இந்த பதிவுக்கு குஷ்பு மற்றும் பாடகி சைந்தவி ஆகியோர் ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
அதாவது சைந்தவி, “தைரியமாக இருங்கள் அக்கா, உங்களுக்காக என் பிரார்த்தனைகள்” எனவும், நடிகை குஷ்பூ, “ நீ மிகவும் தைரியமானவள்” எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை மறைமுகமாக குஷ்பூ சாடியுள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |