ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது.
இந்த மாதத்தில் அம்மனின் சக்தி இரு மடங்காக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்காலத்தில் ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் மற்றும் ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மன் வழிபாடு சிறப்பிக்கப்படுகிறது.
அம்மனுக்குக் கூழ், களி மற்றும் முளைப்பாரி படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
மேலும், சர்க்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன.
ஆடி மாதத்தில் அம்மனை வழிபட வேப்பிலையும் மஞ்சளும் மிகவும் முக்கியமானவை.
இவை நோய்களில் இருந்து காப்பதோடு, வீதிற்கு நேர்மறை ஆற்றலையும் தருகின்றன.
அந்தவகையில், ஆடி மாதத்தில் வேப்பிலை மஞ்சள் வழிபாட்டின் ரகசியம் குறித்து ஜோதிடர் பாரதி ஸ்ரீதர் பகிர்ந்துள்ளார்.