ஆடி வெள்ளி ஸ்பெஷல்: பால் பாயாசம் செய்வது எப்படி?
ஆடி வெள்ளியன்று பூஜை அறையில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டு வர வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை.
அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்துவிட்டு கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி அலங்கரிக்க வேண்டும்.
லட்சுமி அம்மனுக்கு உரிய கோலமிட்டு அம்மனை வரவேற்க வேண்டும்.
பஞ்சமுக விளக்கேற்றி படையலிட்டு வழிபட செல்வங்கள் குவியும் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.
இந்த பதிவில் கோவில்களில் வழங்கப்படும் பிரசாதம் போன்றதொரு சுவையில் பால் பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பால்: ஒன்றரை கப்
பச்சரிசி: கால் கப்
வெல்லம்: 3/4 கப்
கண்டன்ஸ்டு மில்க் : 1-2 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள்: 1/2 தேக்கரண்டி
நெய்: 2 தேக்கரண்டி
முந்திரி, உலர் திராட்சை: சுவைக்கேற்ப
குங்குமப்பூ: சில இழைகள்
செய்முறை
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி குங்குமப்பூ இழைகள் சேர்த்து கொதிக்க விடவும்.
பச்சரிசி நன்றாக சுத்தம் செய்துவிட்டு ஊறவைத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் கழித்து அரிசியை மெல்லிய துணியில் போட்டு உலர்த்தவும். அரிசியை பொடியாக்கிய பின்னர், பாலில் சேர்க்கவும்.
அரிசி வெந்து மென்மையாகும் வரை பால் கெட்டியாகும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும், அரிசி வெந்ததும் அடுப்பை அணைத்துவிடலாம்.
இதன்பின்னர் வெல்லத்தை தூளாக்கி சேர்க்கவும், இதனுடன் கன்டண்ஸ்டு மில்க் சேர்க்கவும்.
மிதமான தீயில் 3 அல்லது 5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே இருக்கவும், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
ஒரு சிறிய வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரியை பொன்னிறமாக வதக்கிய பின்னர், உலர் திராட்சையை சேர்க்கவும்.
இதை பாயாசத்தில் கலந்துவிட்டால் அவ்வளவு தான் கோவில் ஸ்டைலில் பால் பாயாசம் தயாராகிவிடும்.
