ஆடி மாத ராசி பலன் 2021 : கடகத்தில் சஞ்சாரம் செய்யும் சூரியனால் யார் யாருக்கு விபரீத ராஜயோகம் தெரியுமா?

horoscope aadi month
By Nivetha Jul 29, 2021 05:34 AM GMT
Report

நவகிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியன், சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத மாதம் தான் ஆடி மாதம்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்திலும், கோசார ரீதியாகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வணிகம், வேலை, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்திலும் நல்ல பலன்களையும், மாற்றங்களையும் பெற்றிடுவார். 

நவகிரகங்களின் ராஜாவாக திகழும் சூரியன், சந்திரனின் வீடான கடகத்தில் சஞ்சாரம் செய்யக்கூடிய அற்புத மாதம் தான் ஆடி மாதம்.

சூரியன் ஒருவரின் ஜாதகத்திலும், கோசார ரீதியாகவும் சிறப்பாக அமைந்துவிட்டால் அவர் வணிகம், வேலை, குடும்பம், திருமண வாழ்க்கை என அனைத்திலும் நல்ல பலன்களையும், மாற்றங்களையும் பெற்றிடுவார்.

ஜனன ஜாதகத்தில் சூரியன் பலவீனமான இருந்தால் அந்த நபருக்கு பல சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான கோளாறுகளும் ஏற்படலாம்.

சூரியன் சிறப்பான பலனைத் தரக்கூடிய கடகத்தில் சூரியன் இருப்பதால் 12 ராசிகளுக்கு ஏற்படும் பலனைப் பார்ப்போம்.

மேஷம்

ஆடி மாதம் மேஷ ராசிக்கு நிதி நிலை சிறப்பாக அமையக்கூடியதாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் கிடைப்பதற்கான அமைப்பு உள்ளது. சமூகத்தில் உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும். அரசுத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். உங்கள் குடும்பம் தொடர்பாக மனதில் சில விஷயங்களை நினைத்து கொந்தளிப்பு மற்றும் மனக் கலக்கம் இருக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள்..

ரிஷபம் 

நீங்கள் எந்த துறையில் வேலை அல்லது தொழில் செய்தாலும் அதை மிகுந்த பக்தியுடன் செய்வீர்கள். நீங்கள் வேலை செய்யும் பணியிடத்திலிருந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். எந்த ஒரு பெரிய பணியையும் தொடங்க விரும்பினால் அது சிறப்பாக செய்து முடிப்பதற்கான, நேரம் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக இருக்கும். உங்கள் வேலையை முடிக்க கட்டுப்பாட்டுடன் பணிபுரிந்தால், நீங்கள் நினைத்த வெற்றியை எளிதில் அடையலாம்.

​மிதுனம்

சில சாதகமற்ற பலன்களைப் பெற நேரிடும். நிதி ரீதியாக லாபத்தை தரக்கூடியதாகவும், வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சில முரண்பாடான நிகழ்வுகள் நடக்கும். அதனால் மன உளைச்சலையும் சந்திக்க நேரிடும். உங்கள் பணிகளை மேம்படுத்துவதன் மூலமாகவும் முயற்சிகளை முன்னெடுப்பதாலும் லாபத்தைப் பெற்றிடலாம். உதவிகள் கிடைக்கும். இந்த மாதத்தில் உடல் வலிமை குறைவாக இருப்பதாக தோன்றும். . சிறிய உடற்பயிற்சிகள் மற்றும் ஆரோக்கியமான உணவைக் எடுத்துக் கொள்வது அவசியம். மாணவர்கள் கல்வி கவனமாக செயல்படுவது அவசியம்.

​கடகம்

ராசியில் சூரியன் சஞ்சாரம் நிகழும் இந்த காலத்தில் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். பல வழியில் நற்பலனும், லாபமும் கிடைத்தாலும், திடீர் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்களின் கெளரவம், சமூக அந்தஸ்து அதிகரிக்கும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதனால் பிரிவினை நிலை ஏற்படும். உடல் நலனின் கூடுதல் அக்கறை தேவை.

சிம்மம்

செலவுகள் அதிகரிக்கும் சிம்ம ராசி நாதன் சூரியன் கடகத்தில் சஞ்சாரம் செய்வதால் எல்லா விஷயங்களிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. சில விஷயங்களால் அலைச்சலும், செலவுகளும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமிருந்து சில விரும்பத்தகாத செய்திகளை நீங்கள் பெறலாம். உங்கள் தொழில், வியாபாரத்தில் எச்சரிக்கையாக செயல்படவும். புதிய வாடிக்கையாளர்களைப் பெறலாம் மற்றும் சில பயனுள்ள ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

கன்னி

நிதிநிலை சிறக்கும் கன்னி ராசியினர் பல நற்பலன்களைப் பெற்றிடுவீர்கள். பண வரவாகும். நிதி ரீதியாக வலுவாக இருப்பீர்கள். சொத்து தொடர்பான தடைகள் நீங்கும். அரசுப் பணிகளில் பெரும் லாபம் இருக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்காக நீங்கள் நிறைய செலவிடுவீர்கள். பெரிய நபர்களின் அறிமுகமும் அவர்கள் மூலம் நற்பலனும் கிடைக்கும். உங்களுக்கு சமூகத்தில் செல்வாக்கும், அந்தஸ்தையும் நற்பெயரையும் மேம்படுத்தும்.

துலாம்

மகிழ்ச்சியைத் தரும் துலாம் ராசியினர் ஆடி மாதத்தில் நற்பலன்களை அனுபவிப்பர். உங்கள் வாழ்க்கையிலும், வேலை செய்யும் துறையிலும் நிறைய மகிழ்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரும். அரசு வேலை தேடுபவர்கள் வேலை கிடைப்பதற்கான நல்ல நேரமாக அமையும். பதவி உயர்வுக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம். அரசியல் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு மிகவும் சாதகமான நேரம் கிடைக்கும்.

​விருச்சிகம்

குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும் விருச்சிக ராசியினருக்கு பல சுபமான பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிப்பதோடு, நீங்கள் செய்ய நினைத்த திருப்பணி செய்ய வாய்ப்பு ஏற்படும். உங்கள் வேலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கும். தைரியமும் வலிமையும் அதிகரிக்கும், குடும்ப சூழ்நிலை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடிய காலமாக இருக்கும். நீங்கள் எந்த வேலை மற்றும் வணிகம் செய்பவராக இருந்தாலும், அதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கவனக்குறைவால் இழப்புகள் ஏற்படலாம். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். ஆன்மிக நடவடிக்கைகளில் அதிக நாட்டம் இருக்கும்.

​மகரம்

மகர ராசியினர் கவனமாக இருக்க வேண்டிய மாதம். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பிரிவினை உண்டாக்கும் பிரச்னைகள் ஏற்படும். பண வரவு சிறப்பாக இருந்தாலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் புத்திசாலித்தனமாகப் பணத்தை செலவிடுங்கள். மாமியாருடன் சர்ச்சையும் அதிகரிக்கக்கூடும். வர்த்தகர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

கும்பம் 

கும்ப ராசியினர் உங்கள் செயல்களில் வெற்றியைப் பெற கடுமையாக உழைக்க வேண்டியது அவசியம். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

ராசிக்கு 6ல் சூரியன் இருப்பதால் திருமண வாழ்க்கை, கூட்டு தொழிலில் சிறிய பிரச்னைகள் ஏற்படும். உங்கள் மனைவி நோய்வாய்ப்படக்கூடும் என்பதால், இந்த காலம் உங்கள் திருமண வாழ்க்கையில் இன்பம் இருக்காது. வணிகத்தில் சில சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் அல்லது உங்கள் சக ஊழியர்களுடன் மோதல்கள் ஏற்படும் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது அவசியம்.

​மீனம்

சூரியனின் நகர்வு மீன ராசிக்கு நல்ல பலனைத் தருவதாக இருக்கும். இந்த நேரத்தில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நேரம் சாதகமானதாக இருக்கும்.

கடினமாக உழைப்பதன் மூலம், உங்கள் வேலையில் நீங்கள் நிச்சயமாக முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். மனைவியுடன் மகிழ்ச்சியான நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.

வணிக தொழில் முனைவோர் சில நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். இந்த நேரத்தில் சந்தையில் இருந்து கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். நீங்கள் அதிக கடன்களில் சிக்கக்கூடும் என்பதால், அதை திருப்பிச் செலுத்துவது கடினம். வயிறு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும் என்பதால், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது அவசியம்.

மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US