விஷேச ஆடி அமாவாசை தினமான இன்று இந்த தவறுகளை எல்லாம் மறந்தும் கூட செய்திடாதீங்க!
இன்றைய தினமானது சிறப்பான ஒரு தினமாக இருக்கிறது. பொதுவாக சூரியனும் சந்திரனும் இணைந்தால் அந்த நாள் தான் அமாவாசை தினமாகும்.
மேலும், இந்த ஆண்டு ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை வருகிறது. அதில் ஆடி மாதத்தில் முதல் நாள் ஆடி 1 ஆம் திகதி அதாவது ஜூலை 17 இன்று முதல் அமாவாசை வருகிறது அதுபோல ஆடி 31 ஆம் திகதி அதாவது ஆகஸ்ட் -16 அன்று இரண்டாவது அமாவாசை வருகிறது
இந்த ஆடி அமாவாசை தினத்தில் இந்த விடயங்களை எல்லாம் செய்யலாம், செய்யகூடாது என்று பல விடயங்கள் இருக்கிறது அவற்றுள்,
செய்யக்கூடாதவை
அமாவாசை நாளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை போல வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்
அமாவாசை நாளில் வீட்டு வாசலில் கோலம் போடவே கூடாது இவ்வாறு கோலம் போடுவதால் இறந்தவர்களுக்கு சில அதிர்வலைகளை ஏற்படுத்துமாம் அதனால் வாசலில் கோலம் போடுதல் நல்லது அல்ல என்று சொல்கிறார்கள்
இந்த நாளில் மிகவும் கடினமான புதிய முயற்சிகளை செய்யக் கூடாது
உடலில் ஏதேனும் காயம் ஏற்பட்டாலும் ஆறுவதற்கு அதிக காலதாமதம் ஏற்படும்
அமாவாசை தினத்தில் அசைவம் சமைக்கவே கூடாது
ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் செய்யக்கூடாது
செய்யவேண்டியவை
இந்த ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களையும் பெரியோர்களையும் வழிபட வேண்டும் இந்த நாளில் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
பூமிக்கு வரும் முன்னோர்களுக்கு வரவேற்பு கொடுக்க வேண்டும்.
இந்த நாளில் குல தெய்வ வழிபாடு சிறந்தது, மேலும், அம்மனை வழிபடுதல் இன்னும் சிறந்தது.
இந்நாளில் முடிந்த அளவுக்கு தானம், தர்மம் செய்தால் ஐஸ்வர்யம் பெருகும்.
மேலும், இந்த நாளில் எள்தானம், பசு தானம், அன்னதானம், ஆடைதானம் போன்ற தானங்களை வழங்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |